Paypal Info

பேபால் கணக்கு துவங்குவது மிக எளிது.

இந்தப் பக்கத்தில் நீங்கள் பேபால் தளத்தில் ஒரு புதிய உறுப்பினர் கணக்கை எப்படி தொடங்குவது என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். பேபால் என்பது ஆன்லைனில் பயன்படுத்தப்படும் ஒரு மிகச்சிறந்த பணபரிமாற்று தளமாகும். இந்த பேபால் ஆனது 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பின்பு 2002 ஆம் ஆண்டு ebay இன் துணை நிறுவனமாக மாறியது. இன்றைய நவீன உலகில் பல கோடி மக்கள் பேபால் தளத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பேபாலின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது. அதனுடைய ஒரு சில கிளைகள் இந்தியாவில் சென்னை மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. பேபால் நிறுவனம் சுமார் 193 நாடுகளில் வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது. மேலும் பேபால் ஆனது பல முறை தன்னுடைய சிறப்பான சேவைக்காக விருதுகளை பெற்றுள்ளது.
Picture
பேபால் தளத்தின் மூலம் நீங்கள் அமெரிக்க டாலரை மிக எளிதாக இந்திய ரூபாயாக மாற்றிவிட முடியும். உலகிலுள்ள முதன்மையான 25 நாடுகளின் நாணய மதிப்புகளில் உடனடியாக பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும் என்பதுதான் பேபால் தளத்தின் தனிச்சிறப்பாக விளங்குகிறது. நண்பர்களே! ஞாபகம் இருக்கட்டும், இந்தியாவில் புதிதாக ஒரு பேபால் கணக்கை தொடங்க உங்களிடம் கட்டாயம் பான்கார்ட் (Pancard) இருக்க வேண்டும்.

Step 1

முதலில் பின்வரும் பட்டன் மீது க்ளிக் செய்யுங்கள். பிறகு பேபால் தளத்தின் முகப்பு பகுதி புதிய திரையில் தோன்றும்.
Picture
இப்போது " Sign Up" என்பதை க்ளிக் செய்யுங்கள்.
Picture
Step 3 :இப்போது பேபால் விண்ணப்ப படிவம் ஒன்று தோன்றும். அதில் தேவையான தகவல்களை' சரியாக கொடுக்க வேண்டும்.
Picture
Step 2 :பிறகு, பின்வருமாறு திரை ஒன்று தோன்றும். அதில் "India" என்பதை தேர்வு செய்து, "Get Started" மீது க்ளிக் செய்யுங்கள்.
Picture
Email address : இங்கு உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுங்கள்.

Choose a password : இங்கு உங்களுக்கு தேவையான பாஸ்வேர்டை கொடுங்கள். பாஸ்வேர்ட் கொடுக்கும்போது சிறிய (abcd) மற்றும் பெரிய (ABCD) , குறியீடுகள் (!#$%&) , எண்கள் (1234) ஆகியவற்றைப கலந்து பயன்படுத்துங்கள்.

Re-enter password : மறுபடியும் உங்களுடைய பாஸ்வேர்டை இங்கு டைப் செய்யுங்கள்.

First name : உங்களுடைய முதற்பெயரை இங்கு குறிபிடுங்கள். (எ.கா) Muthu

Middle name : இந்த இடத்தில எதுவும் கொடுக்க வேண்டாம்.

Last name : உங்களுடைய இனிசியலை இங்கு கொடுங்கள்.  (எ.கா) D

Date of birth : இந்த இடத்தில் உங்களுடைய பிறந்த தேதி மற்றும் மாதம், வருடம் ஆகிய விவரங்களை சரியாக கொடுங்கள்.
Picture
Address line 1 : இந்த இடத்தில் உங்களுடைய வீட்டு முகவரியை கொடுங்கள்.

Address line 2 : வீட்டு முகவரி பெரிதாக இருந்தால் மீதமுள்ளவற்றை இங்கே டைப் செய்யுங்கள். இல்லையெனில் விட்டுவிடுங்கள்.

Town / City : உங்களுடைய ஊர் / நகரம் ஆகிய விவரங்களை கொடுங்கள்.

State : உங்களுடைய மாநிலத்தை சரியாக தேர்வு செய்யுங்கள்.

PIN code : இந்த இடத்தில் உங்களுடைய பின்கோடு நம்பரை கொடுங்கள்.

Mobile Number : இந்த இடத்தில் உங்களுடைய மொபைல் நம்பரை சரியாக கொடுங்கள்.

Credit / debit card number : உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களுடைய கிரிடிட் கார்ட் அல்லது டெபிட் கார்ட் போன்றவற்றை பேபாலுடன் இணைத்துக்கொள்ளலாம். இல்லையெனில் இந்த பகுதியை அப்படியே விட்டுவிடுங்கள். (இந்தியாவை பொறுத்தவரை பேபால் நிறுவனமானது ICICI மற்றும் Axis வங்கிகளின்  கிரிடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்ட்டை மட்டும் ஏற்றுக் கொள்கிறது. மற்ற வங்கிகளின் கிரிடிட் & டெபிட் கார்ட்டை ஏற்றுக் கொள்வதில்லை).

இறுதி கட்டமாக, நீங்கள் கொடுத்த அனைத்து விவரங்களும் சரியாக உள்ளது என்று எண்ணினால் "Agree and Create Account" என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். இப்போது பேபால் தளத்திலிருந்து உங்களுக்கு ஒரு "Verification" மெயில் வரும். அந்த மெயிலில் "Confirmation Link" ஒன்று இருக்கும். அதனை க்ளிக் செய்து உங்களுடைய கணக்கை உறுதி செய்துகொள்ளுங்கள். பேபால் தளத்தில் பணத்தைப் பெறுவதற்கு நீங்கள் கட்டாயம் மூன்று செயல்களை செய்திருக்க வேண்டும். அவற்றை கீழே காணுங்கள்....

1. Pan Card Number Verification

பேபால் தளத்தில் லாகின் செய்த பிறகு Profile என்பதை க்ளிக் செய்யுங்கள். My personal info என்பதில் PAN என்பதை தேர்வு செய்து அதில் உங்களுடைய Pan Card Number ஐ Enter செய்யுங்கள். இப்போது Continue பட்டனை க்ளிக் செய்யுங்கள். பின்பு ஒரிரு நாட்களில் உங்களுடைய Pan Number சரிபார்க்கப்பட்டுவிடும். ஒரு சில நேரத்தில் PAN Number ஐ Submit செய்த அடுத்த வினாடியே சரிபார்க்கப்பட்டுவிடும்.
Picture
2. Add Purpose Code

Purpose Code என்பது நீங்கள் எந்த நோக்கதிற்காக பேபால் கணக்கு தொடங்கினீர்கள் என்பதை குறிப்பதாகும். நீங்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பவர் என்றால் "Advertising and market research" என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு Profile பகுதியில் My money என்பதை தேர்வு செய்யுங்கள். அதில் Purpose Code என்பதை க்ளிக் செய்து அதில் "Advertising and market research" என்பதை தேந்தெடுங்கள். அவ்வளுதான் வேலை முடிந்துவிட்டது.
Picture
3. Add Bank Account Details

பேபால் தளத்தில் லாகின் செய்த பிறகு Profile அருகில் Mouse Cursor ஐ கொண்டு செல்லுங்கள். அங்கே Link/Edit Bank Account என்பதை க்ளிக் செய்யுங்கள். உதாரணத்திற்கு கீழேயுள்ள படத்தைப் பாருங்கள்.
Picture
இப்போது உங்களுடைய வங்கி கணக்கு விவரங்களை சரியாக Enter செய்யுங்கள். Enter செய்துவிட்டு Confirm என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு பேபால் தளமானது உங்களுடைய வங்கி கணக்கை உறுதி செய்துகொள்ள இரண்டு சிறிய பண பரிவர்த்தனைகளை நிகழ்த்தும். (எ.கா Rs.1.20 மற்றும் Rs.1.30). அந்த இரண்டு சிறிய தொகையினை 3 லிருந்து 4 நாட்களுக்குள் உங்களுடைய வங்கி கணக்கில் நீங்கள் பார்க்கலாம். பின்பு அந்த தொகையினை பேபால் தளத்தில் Submit செய்து உங்களுடைய வங்கி கணக்கை உறுதி செய்துகொள்ளுங்கள். Submit செய்வதற்கு வழக்கம்போல் பேபால் தளத்தில் லாகின் செய்யுங்கள். பிறகு Profile என்ற பகுதியில் Link/Edit Bank Account என்பதை தேர்ந்தெடுங்கள். பின்பு Confirm Bank Account என்பதை க்ளிக் செய்யுங்கள். இப்போது அந்த இரண்டு சிறிய தொகையினை Type செய்து OK கொடுங்கள். அவ்வளுதான் உங்களுடைய வங்கி கணக்கு வெற்றிகரமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. இனிமேல் நீங்கள் பேபால் வழியாக பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு எளிதில் கொண்டு வரலாம்.

குறிப்பு : ஆன்லைனில் நீங்கள் சம்பாதித்த பணம் பேபால் கணக்கை அடைந்தவுடன் அடுத்த 24 மணி நேரத்தில் உங்களுடைய பணம் அன்றைய தேதியில் டாலரிலிருந்து ரூபாயாக மாற்றப்பட்டு அந்த பணத்தை உங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றுவதற்கான செயல்பாடுகள் நடைபெறும். இது நமது நாட்டின் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பேபால் நிறுவனத்திற்கு இட்ட கட்டளையாகும். மேலும் குறைந்தபட்சம் 3 லிருந்து 7 நாட்களுக்குள் உங்களுடைய பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும். அதுமட்டுமின்றி உங்களுடைய பேபால் கணக்கில் குறைந்தபட்சம் 10$ இருந்தால் நீங்களாகவே அதனை உங்களுடைய வங்கிக் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த பணமும் உங்களுடைய வங்கி கணக்கிற்கு வந்துசேர 3 லிருந்து 7 நாட்களாகும்.

No comments:

Post a Comment